இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, January 5, 2012

நட்பே நலமா..?


உன்னை சிதைக்க
காத்திருக்கும் கயவர்கள்
மத்தியில் ஜாக்கிரதை...
நட்பை பற்றி கவிதை
படைப்பார்கள்...(சிலர்)
நட்பை காலில் மிதிப்பார்கள்
நட்பே நலமா...?
நீ தான் உயிர் என்பார்கள்
முதுகில் ____ என்பார்கள்
நட்பே நலமா?

நட்பே சிறந்தது...


நண்பனாக இருக்க தகுதிகள்
தேவை இல்லை
நட்புக்கு உறவுகள்
தூரம் இல்லை
துரோகத்திற்கும் அன்பை
காட்டும் நட்பே சிறந்தது
அடித்தாலும் அனைத்துகொள்ளும்
நட்பே உயர்ந்தது
நொறுங்கிய கண்ணாடி சேராது
விரும்பிய நட்பு உடையாது
காலங்கள் பல கடந்தாலும்
நட்பு மறையாது
அன்பு குறையாது
நட்பு தான் அடித்தளம்
நான் வாழ நட்பே அடையாளம்

அநாதை இல்லம்


எண்ணற்ற குழந்தைகளை
வளர்க்கும் மாற்றாந்தாய்
கருவறை.....

முரண்பாடு


உள்நாட்டிலே அமைதி இல்லை
வெளிநாட்டினை குறைசொல்லும்
இந்தியா?

பண்பாடு


எண்ணெய் வாங்க தான்
காசில்லை அப்போது
என்னை வாங்கவே
விருப்பமில்லை இப்போது..
படுகுழி ஜனநாயகம் ...

தன்னை அறி...


சக்தியை உணராமல்
சகதியில் உழலும்
மனித இனம் அழிந்தாலும்
நல்லது தான்....

நிழல் என்பது நிஜமா ?


நிழலில் நிஜம்
இருக்கலாம்
நிஜத்தில் நிழல்
இருப்பது
நிழலின் நிஜத்தை
உணராமல்
மடிந்து விடும்

நீ.. நான்.. நாம்..


நீ என்பது ஏமாற்றம்
நான் என்பது முன்னேற்றம்
நாம் என்பது உயர்வு
இது தான் வாழ்வின்
தத்துவம்...
புரிந்தோர்க்கு இதுவே
மகத்துவம்...

நட்பின் புற்று நோய்..


விளைவது தெரிந்தால்
கிள்ளிவிடலாம்,,,
விளையாமல் அழிந்தால்
தள்ளிவிடலாம்..
தெரியாமால் விளைந்து
முதுகிலே மறைந்து
உயிரினை எடுப்பதை
என்ன செய்யலாம்?

வாழ்க காதல் வளமுடன் ...

கண்களை மூடாமல் 

வந்த கனவு

நீ தானடி...
பலிக்காது என்று
உபதேசம் செய்த
மனதை நொறுக்கி
உணர்வை நறுக்கி
உன்னை சுற்றினேன்
உள்ளம் வற்றினேன்
சோலைவன வாழ்வு
பாலைவனமாக நான் தான்
காரணம் அதை யார் தான்
கூறனும்...நீ செழித்தாய்
என் கனவினை அழித்தாய்
முற்றும் துறந்தவனாய்
அலைகிறேன்....
மூடன் பட்டம்
பெறுகிறேன்...
வாழ்க காதல் வளமுடன்...