இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, October 13, 2011

யார் தவறு ?

கல்லுக்குள் ஈரம் என்று
பிழிந்தெடுத்தால் குருதி
கடமைகள் கல்விக்குள்
புகுந்து கிடக்கின்றன,
காரணம் இல்லாமல்!
விண்மீனை தோற்கடிக்க
செம்மீனை அலங்கரித்தால்
யார் தவறு?

ஓடும் நதியினில் ஓடம்
ஓலங்கள் நெஞ்சில்
ஓசையிடுகின்றது
அது திசைமாறுமா?
இளமைகள் கனவில்
முதுமைகள் புகழ் சேருமா?
நெஞ்சங்களில் தீ மூட்டம்
புகைகளில் மூழ்கும் மனங்கள்
மூச்சடைத்தால் யார் தவறு?

தெளிவடையா அறிவொளியின்
ஆக்கங்கள் ஆவல் தந்தால்
அறியாத பிள்ளை மனங்கள்
அழிந்த கோடுகளாய்,
அலைகழிக்க படுகின்றன!
விண்ணுக்கு யார் விறகு தந்தது?
எரிந்த சாம்பல்கள்
ஏழ்மையை ஏளனம் செய்கின்றன

போதும் குருத்தெலும்புகள்
முறிந்தது- அவை பெருத்து
பறைசாற்றட்டும் மகத்துவத்தை ...


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment