இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, October 13, 2011

சுரண்டும் சூரர்கள்

திறமைகள்  தெரு நாய்களாய்
அலைகின்றன பரந்தவெளியில்
இருக்கின்றதை கிண்டாமல்
இல்லாததை தோண்டும் உலகம்
செவிக்குணவை வயிற்றுணவோடு
விற்போர் கூட்டம் தான் உலகில்
பயிரை மேய வந்த வித்தகர்கள்
வைரசாய் அரித்தெடுக்க
வழிவிடும் இந்நாட்டு மேதைகள்
செலவினங்கள் உழைப்புக்கு மேல்
உழைப்பினங்கள் வறுமைக்கு கீழ்
செல்லரித்த மலர்மொட்டு
மாலைக்குள் அலங்காரமாய் !
செல்லாத சஞ்சலங்கள்
ஏழ்மைக்கும் மேலாய்
உள்ளங்கை அரித்தாலும்
மருத்துவ செலவு தான் ஏழைக்கு ...


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment