இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 23, 2011

பிரிவென்பது புது ஆரம்பம்... நட்போடு தான் நாம் வாழுவோம்..

மனமே ஒ மனமே நீ கலங்காதிரு
பிரிவை உன் வாழ்வில் நீ கலக்காதிரு
பிரிவென்பது புது ஆரம்பம்
நட்போடு தான் நாம் வாழுவோம்

கல்லூரி நாட்கள் வாடாத பூக்கள்
உளமாற பாட இனிதான பாக்கள்
உன் சொந்தம் தானே முடியாது மனமே
புது வாழ்வின் பூக்கள் மலராகும் தினமே
தினந்தோறும் வந்து திருநாளை போன்று
குதியாட்டம் போட்ட கல்லூரி ஆண்டு
பிரியாது நட்பென்னும் பூமாலையே
பிரிவென்பது புது ஆரம்பம்
நட்போடு தான் நாம் வாழுவோம்

நண்பர்கள் எல்லாம் நட்போடு தானே
வாழ்ந்தாக  வேண்டும் என்னாளும் தானே
கல்லூரி வாழ்க்கை இறக்கின்ற வரைக்கும்
நினைவாலே கொஞ்சம் மகிழ்ந்தாடும் நெஞ்சம்
பிரிகின்ற நாளில் கணமாகும் இதயம்
அன்பாலே ஏங்கும்  இனிதான உதயம்
இது தானே அழியாத புது காவியம்
பிரிவென்பது புது ஆரம்பம்
நட்போடு தான் நாம் வாழுவோம்..



த. நாகலிங்கம்


No comments:

Post a Comment