இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 21, 2011

நான் இந்தியன்... வல்லரசாகுமா இந்தியா?

பொங்கி எழுவேன்
வீட்டுக்குள்ளே...
மங்கி விடுவேன்
நாட்டுக்குள்ளே....
நல்லதை செய்வேன்
வீட்டுக்குள்ளே...
கெட்டதை செய்வேன்
நாட்டுக்குள்ளே...
பாசம் காட்டுவேன்
வீட்டுக்குள்ளே...
வேஷம் போடுவேன்
நாட்டுக்குள்ளே...
வீர வசனம் பேசுவேன்
வீட்டுக்குள்ளே...
கோழையாய் இருப்பேன்
நாட்டுக்குள்ளே...
கொஞ்சி குலவுவேன்
வீட்டுக்குள்ளே...
நெஞ்சை பிடுங்குவேன்
நாட்டுக்குள்ளே...
நான் இந்தியன்...
வல்லரசாகுமா இந்தியா?


த. நாகலிங்கம் 



No comments:

Post a Comment