இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 23, 2011

தொடங்கும் கருவறை.... முடியும் கல்லறை.

கருவறையிலே தொடங்கும் போராட்டம்
ஒரு துளியில் ஆயிரம் உயிர்களை தள்ளி
ஒரு  உயிர் வளரும்... கருவறையில்
தொடரும் போராட்டம் மண்ணில் இன்று
புகழுக்காக போராட்டம்
வெற்றிக்காக போராட்டம்
பணத்துக்காக போராட்டம்
போராட்டம் என்னும் போர்வை
உறவுகளையும் பாசங்களையும்
போர்த்தி கொண்டது
போராட்டமே வாழ்க்கையாகி போனது
வாழ்க்கையே போர்க்களம் தான்
தொடங்கும் கருவறை....
முடியும் கல்லறை.


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment