இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 23, 2011

நீ தானே என்னோவியம்...

உயிரானேன்... உனதானேன் ...
உன்கனவில் நான் வருவேன்
என் இதயம் அதை தருவேன்

என் கண்கள் என்றும் உன் பிம்பம் தானே
உயிராக வந்தென்னில் உயிரெடுத்தாய்
காற்றாக வந்தாய் எனை கொண்டு சென்றாய்
இப்போதே என் நெஞ்சம் கரையுதடி
வானவில் கொண்டு ஆடை ஓன்று தைத்தேன்
உனக்காக காத்திருப்பேன்...

ஒரு வானம் தானே உலகெங்கும் காக்கும்
உன் வானம் தானே நீ அறிவாய்
கடலோடு கரைந்தால் உப்பாக கூடும்
உன்னோடு கரைந்தேனே இனிப்பானதே
ஓவியம் கூட உன்னை கண்டால் நாணும்
நீ தானே என்னோவியம்...

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment