இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

மானிட பிறவி...

மானிட பருவ மகிமை
தெரியாமல் மங்கி
கிடக்காதே
நரமாமிசம் தின்னும்
மதவெறியர்களை
இல்லாதாக்கு !
நன்னெறி தவறும்
நய வஞ்சகர்களை
நாசமாக்கு!
தேவைக்கு மேல்
தேடிச் சேர்க்கும்
பதவி வெறியர்களை
சிறை செய்!
படிப்பிற்கு பணம் கறக்கும்
அறிவிலிகளை வெறுமையாக்கு
இருட்டில் வாழும்
உழைப்பாளிகளை
இமையதிற்கேற்று
மானிட மகத்துவத்தை
உலகிற்கு எடுத்து காட்டு
அப்போது தான் நீ
மானிட பிறவி...



த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment