கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 24, 2011

வாழ்கிறேன் உனக்காக....

அன்பே....
நான் ஷாஜகான் இல்லை
நீ எனக்கு முதல் மனைவி தான்
அதற்காக தான் உனக்கு
தாஜ்மஹால் கட்டவில்லை என்று
எண்ணாதே....
நான் அவனை போன்ற செல்வ செழிப்பு
பொருந்திய அரசன் இல்லை....

வருகிறேன் நீ இல்லாத எமலோகத்தில்
வசிக்க நான் விரும்பவில்லை...
நீ அங்கேயே இரு....
மறு திருமணத்திற்கான ஏற்பாடுகளை
செய் சொர்க்கத்தில்....
மலையின் உச்சியோ? ஒரு பாட்டில் விஷமோ?
மின்விசிறியில் கயிறோ?...
நான் உன்னை அடையும் வழி தேடி கொடுக்கும்

கல்லறை கட்டி உன்னை
அடைக்க விரும்பாதவன்... நான்
மெல்லிய காற்றிலே இதமான
மனதுடன் மெதுவாக மணம்
வீசி சுற்றி திரிந்து கொண்டிரு
நானும் காற்றில் கலக்க
சில நிமிடங்கள் போதும்....

உன்னால் பிறந்த உயிரை
விட்டுவிடலாமோ......?
ம்மா ம்மா  ம்மா  சொல்லும்
மழலை குரலை கேட்கிறாயா?
எனக்காக வாழ்ந்த நீ...
உனக்காக யார்? நான் தான்...
வருகிறேன்... காத்திரு....

காற்றிலே ஜன்னல் கதவு ஆடினால்
நீ தானோ?... சிந்திக்கிறேன்
காகம் பார்த்தாலும் உன் நினைவு தான்..
யாரோ கதவை தட்டினார்கள்
ஒரு இரவில்.... திறந்தேன்
உன் எதிர்ப்பார்ப்புகளோடு...
ஏமாற்றம் தான்.... அது நீயில்லை
என் தாய்... விளக்கை அணைத்துவிட்டு
தூங்கு... சொல்லிவிட்டு சென்றார்கள்
என் காதில் விழவில்லை...
நீயே ஒலித்து கொண்டிருக்கும்
காதுகளில், மற்றவர்கள் பேச்சு
செவிடன் காதுகளில் சங்கு தானே...
வருகிறேன்... காத்திரு...

சில நிமிடங்கள் தான் உன்னை அடைய
இல்லை... இல்லை ... ஒரு நொடி போதும்
ஐயோ... உன்னால் உதித்த உயிரை
நீ தான் தவிக்க விட்டு சென்றாய்...
நானும் அப்படி செய்தால்...
உன் மனம் தாங்குமா...
ம்மா.. ம்மா.. சொல்லும் மழலை
குரலை கேட்கிறாயா?

நம் பயிரை நாமே அழிக்கலாமோ?
வேண்டாம் வேண்டாம்
வேரூன்ற செய்து வருகிறேன்
அதுவரை காத்திருப்பாயா
என் செல்லமே...
காத்திரு நிச்சயம் வருகிறேன்...

காத்திரு வருகிறேன்...
என் தெய்வமே...
அவன் அப்பா சொல்லும் அழகு...
ஆயிரம் கவிஞர்களும் வர்ணிக்க...
தகாதது.....
விட்டு வர மனமில்லை... இருந்தாலும்
வருகிறேன்...
தெருவோரம் தூக்கி செல்லும் என்னை
அம்மா கேட்கிறான்... நான் என்ன செய்ய..
வேதனை வாட்டுகிறது..
இப்போதே உன்னை அடைய மனம்
தவிக்கிறது...

உன் மாமியாருக்கு புரியவைத்தாலும்
உன் மகனுக்கு  அம்மாவை
எங்கு தேடுவேன்...
உன் போல் பாசம் எவரும் தருவாரோ.?
என் மனம் தவிக்கிறதே....
நான் வருகிறேன் காத்திரு.....

எனக்காக அல்ல நான் காமுகனும் அல்ல
உன் உயிர் மகனுக்காக...
ஒரு அம்மா... இவள் தான்....
அந்நியம் அல்ல.... உன் தமக்கை தான்...
இருந்தாலும் உன்னை அடைவது
நிச்சயம்.....
வருகிறேன் காத்திரு....

அடம் பிடிக்கிறான் உன் மகன்...
தங்கச்சி பாப்பாவிற்கு...
நான் என்ன செய்ய....
உன் முக சாயலை 
விதைத்து சென்றவள் என் மகள்....
நீயே வந்தாயோ என் மகளாக
நான் வருவது தாமதமானதால்...


நீயே என்னை தேடி வந்துவிட்டாய்
காத்திரு.... வருகிறேன்... இது
அர்த்தமில்லாத வார்த்தையோ?
உனக்காக வாழ்கிறேன்...
இனி நீ தான் என் மகள்....

இறந்தவள் உயிர்த்தெழுந்தாள்..
என் மகளாக....
எனக்கு நீ தான் ஏசு...
பெண் ஏசு....
வாழ்கிறேன் உனக்காக....

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment