கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 22, 2011

மக்கள் மனங்கள் மாற்றம் காணுமோ ...

உலக வாழ்க்கை தானே
நிலையில்லாமல் போகும்
மக்கள் மனங்கள் மாற்றம் காணுமோ
உண்மை நிலையை அறிய கூடுமோ
பிறக்கும் போதும் எதுவுமில்லை
இறக்கும் போதும் எதுவுமில்லை
மக்கள் மனங்கள் மாற்றம் காணுமோ
உண்மை நிலையை அறிய கூடுமோ

மனித நேய வார்த்தைகள் இன்று
மறைந்து போக காரணம் எதுவோ
மதங்கள் பிடித்த மனித நெஞ்சமோ
வள்ளல் வாழ்ந்த பூமி இன்று
வெடித்து சிதற காரணம் எதுவோ
சாதி பித்து அரக்கன் நெஞ்சமோ
இறைவன் படைத்த உலகம் இன்று
பேய்கள் பிடியில் என்றால்
இறைவன் எங்கே தூங்க சென்றார்
அறிவோர் யாரும் உண்டா
கயவர் கையில் உலகம் என்பதால்
யார் தான் மீட்பதோ....


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment