இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Saturday, October 22, 2011

வழியாதோ உன் காதல் ...

நீயாக நானிருந்தால்
நெஞ்சமெல்லாம் இதம் பரவும்
நானாக நீயிருந்தால்
காவியமே கதை படிக்கும்

சிறுமுகையே நறுமுகையே
சிந்தாத தேனமுதே
காலங்கள் நம்மால் இன்று
காணாதோ மழலை ரெண்டு

அழகோடு உன்னை படைத்து
என் நெஞ்சை பணயம் வைத்து
உருவான காதல் இதுவோ
உலகாளும் தேடல் அதுவோ

மலை  போன்ற நெஞ்சத்தை
வெடி வைத்து தகர்த்தாயே
உடையாத எந்தன் நெஞ்சம்
உன்னாலே உருகுதடி

கலையோடு ஒன்றாகி
இளமைகளின் திடலுமாகி
விளையாடும் காதல் இதுவோ
உலகாளும் தேடல் அதுவோ

வண்டுரிஞ்சும்  தேனாக
குடித்தாயே  எந்தன் உயிரை 
தேனோடு நானும்  களிக்க
வழியாதோ  உன் காதல்



த. நாகலிங்கம்

No comments:

Post a Comment