இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 16, 2011

முதிர் கன்னி...

என் இளமையும் அழகும்
கர்வம் தந்தது
உலகில் தான் தான் என்னும்
அழிவை தந்தது
எனக்குள் ஒருவனை
கற்பனை செய்தேன் 
என் கற்பனைக்கு ஏற்ற 
ஆண் மகன் பூமியில்
எங்கும் இல்லை...
யாருக்கும் கிட்டாத 
கணவன் எனக்கு 
வேண்டுமென்றேன்
உனக்கு இங்கில்லை யாரும்
வானில் இருந்து தான்
குதித்து வருவான் என்றாள்
என் பாட்டி ..
என் ஆசை நிறைவேறுவதில்
தாமதமோ....
நான் வானை நோக்கி 
காத்து கொண்டிருக்கும் 
முதிர் கன்னி...    

த. நாகலிங்கம்

      

No comments:

Post a Comment