இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

என் இதயம் நீயானது ...

இமைகளால் கனவுகள்
சுமையானது - உன்
இதழ்கள் பதித்த சுவடுகளை
மனம் தேடுது- அதை
தினம் நாடுது
என் கண் பாதை வழியாக
நீ ஏன் வந்தாய்?
உன் விழி போதை
மொழி கற்று
விடை கேட்கிறேன்
நீ கடல் தேடும் நதியானால்
கடலாகிறேன்
நீ உடல் தேடும் உயிரென்றாள்
உடலாகிறேன்
உன் மொழி தானே என்றென்றும்
என் காவியம்
நீ யாராலும் உணராத
நீர் ஓவியம்
உன் பார்வை தான்
என் பாதை கால்
சொன்னது தினம்
துடிக்கின்ற இதயம்
நீயானது....

த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment