கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 25, 2011

நட்பை போல நல்ல வார்த்தை ஏதும் இல்லையே...

நட்பை போல நல்ல வார்த்தை
ஏதும் இல்லையே...
நட்புக்கொரு ஈடு இணை
என்றும் இல்லையே...
சொல்லிகொள்ளும் இன்பம் மட்டும்
இங்கும் இல்லையே
எங்கும் இல்லையே ....

உறவை தேடும் உயிரில் வாழும்
நட்பை சேருங்கள்...
உலகம் மாறும் வாழ்வும் மாறும்
உண்மை காணுங்கள்...
பிறந்த பயனை முழுமை செய்யும்
நட்பே சிறந்தது...
நட்பில் வாழ்வில் நண்பர் கூட்டம்
வாழ்வில் உகந்தது...

தோல்வி வந்த போதும்   நட்பு
வெற்றி கொடுக்கும்...
வெற்றியாலே வந்த வாழ்வு
நட்பில் சிறக்கும்...
சின்ன சண்டை வந்த போதும்
கூட பாசம் இருக்கும்
பாசத்தாலே வேஷம் எல்லாம்
ஓய்வு எடுக்கும்


த. நாகலிங்கம்


No comments:

Post a Comment