இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, October 6, 2011

வருங்கின்ற காலம்

நினைவுகள் சூடாகும் 
கடும் மழையிலும்...
கனவுகள் வேரூன்றும்
பெரும் புயலிலும்....
உணர்வுகள் உறைந்துவிடும்
சுடும் வெப்பத்திலும்...
கருமேகங்கள் பொழியும் ரதத்தை 
பிழியும் மனித சத்தத்தை....
இருள் முழுதும் தொடர்ந்துவிடும்
பகல் என்பது அழிந்துவிடும்
கடல் முழுதும் வற்றிவிடும்
நீரை பூகம்பம் உறிந்துவிடும்
மனிதம் என்பது மறைந்துவிடும்
புனிதம் அதிலே இறந்துவிடும்
பிணங்கள் மனித உணவாகும்
பணங்கள் மரத்தின் உரமாகும்
சுவாசம் அங்கே குறைந்துவிடும்
துர்வாசம் பூமியை துளைத்துவிடும்
காற்றை வாங்க பணம் வேண்டும்
சேற்றை உண்ணும் குணம் வேண்டும்
அது தான் தீயோர் நகரம் 
நல்லோர்க்கு சுவர்க்கம் நிகழ்காலம்  

த. நாகலிங்கம்    
   
     


No comments:

Post a Comment