உறைவிடம் இல்லா
உழைப்பாளிகள்
மரத்தடி சூழலில் உறங்கி
களைப்பாருகிறார்கள்
ஏழு பிறப்பெடுத்தாலும்
கிடைத்தற்கரிய செயலொன்றை
மூலையிலே உறங்கவிட்டு
இரும்பு பெட்டியை காவல் காக்க
உறக்கத்தை விரட்டிவிட்டு
பெரிய மனிதன் போர்வை போர்த்தி
கடைசியில் சுடுகாட்டில்
உறங்கி விடுகிறார்கள்
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment