காதல் பரீட்சையில்
எத்தனை வினாக்கள்
ஒவ்வொன்றும் வருங்கால
கனாக்கள்!
ஒன்றை விட்டால் ஐந்து
மதிப்பெண்கள் குறையுமே
வாழ்க்கையில் உயர்வென்பது
மறையுமே...
என்ன செய்வேன் நானென்று
புரியவில்லை
என் அறிவுக்கு எட்டும் வினா
இது இல்லை
யாரை கேட்டு எழுதினாலும்
மாட்டுவேன்
என் கைகளில் விலங்கதனை
பூட்டுவேன்
பரீட்சைகள் பல எழுதி
வெளி வந்தவன்
இந்த காதல் பரீட்சை
தோல்வி என்றால் மனம்
தாங்குமோ
எத்தனையோ சிக்கலான
வினாக்கள்
அத்தனையும் வருங்கால
கனாக்கள்
மனைவி என்றால் என்ன
கேள்விக்கு பதில் சொல்ல
முடியுமோ
காதல் ஒன்றும் கெட்ட செயல்
இல்லை
அதை புரிய இன்னும் காலம்
வரவில்லை
நித்தம் நானும் யோசித்து
பார்க்கிறேன்
சத்தம் இல்லா வாழ்க்கை
அதை தேடுறேன்
எந்த கேள்வியும் எனக்கு
இன்னும் புரியவில்லை
சொந்த பதில் தருவதற்கு
வயதில்லை...
No comments:
Post a Comment