புகழ் தேடும் மனிதரினம்
பூமிக்குள்ளே யென்ற
புண்ணிய வார்த்தைகளை
புரியாத மாந்தர்கள்
புலங்காகிதம் அடைந்தோமென்று
பூரிப்படைகின்றதே
அழியாத செல்வ மென்றால்
அது தானே கற்கும் கல்வி
அறிவில்லா அன்பருல்லாம்
அணி தேடி அலைகின்றதே
ஆவணம் அடைகின்றதே
அறிஞர்கள் கற்று தந்த
அறிவொளிகள் வாழ்கவே என்று
வாழ்த்துவோம்! வணங்குவோம்!!
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment