இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 7, 2011

துளிப்பா 2


*உழைப்பாளிகள் பெற்ற
அழியா வரம்  
 உறக்கம்

*மனதை பிரதிபலிக்கும்
  மாயக் கண்ணாடி
  கனவு

*திருடர்கள் வாழ்வில் 
  பிரகாசம் 
  இருட்டு 

*சுற்றும் உலக வாலிபன்
   பூமி 

*எமனின் புது
  பரிணாம வளர்ச்சி
  சுனாமி

*புலப்படாத 
  ரகசிய மிருகம்
  நட்பு

*உழிப்பாளிகளின் அறியாமை 
  பூதம் - உழைப்பு 

*அவசர வாழ்க்கையின்
  தூரத்து சொந்தம்
   அன்பு 

*அன்பானர்களுக்கு 
தரப்படும் நோபெல் 
பரிசு _ பாசம்

*புத்தர்களை உருவாக்கும்
  புரியாத மந்திரம்
  ஆசை

*அர்த்தம் அறியப்படாத
   பழங்கால தத்துவம்
    கருணை

*ஒப்பனை இல்லாத 
   நடிகை- பயம் 

த. நாகலிங்கம்          
            
    
   

No comments:

Post a Comment