விழிப்பதற்கான வேலைகளை
இயற்கை கவனிக்க
என் கண்கள் இமை மூடியும்
காதல் கவிதையை இசைத்தது
கருமேகம் சூழ்திருந்த கனவில்
இன்று விடிவெள்ளியாய் தேவதை
என்னுடன் இருக்கிறாள்
இசைஎன்றும் சொல்லமுடியாத
வார்த்தைகளை என்னிடம் பயின்றாள்
என் நினைவினை பறித்தாள்
காற்றினால் தடுமாறிய முல்லைக்கு
தேர் தந்தான் பாரி
பருவத்தால் தடுமாறிய
என் தேகத்திற்கு தேகம்
தந்தாள் இந்த காரி(கை)
நிமிட சுகமொன்றும் வாழ்வில்லை
தானும் உயிர் நீக்கா துணைபுரியும்
வல்லமை வந்தது எனக்கெங்கே?
தேடினேன் புரிந்தது
மங்கையின் மனதிற்குள்
புகுந்தவன் என்றும் அவ்வல்லமை
பெற்று உயிர்த்தெழுவான்.....
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment