இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

நீ தானே என் ....

*உனக்குள்ளே பிறந்தேன் 
உயிருடன் வளர்ந்தேன்
உறங்காமல் துடித்தேன் 
உலகை புதிதாய் படித்தேன்
*நான் ஒரு ஓவியன் 
உன்னை மனமென்னும்
தாளில் கண்ணாகிய 
பேனாவால் அழியாமல்
வரைந்து விட்டேன்
நீ தானே என் அழகோவியம்
    
*தவமே வரமாகி 
என் நெஞ்சில் உரமானது
உன் மௌன கண்கள் 
பேசியது ஆயிரம் அர்த்தங்களில்

*வீசிய பார்வைகளின் 
விவரம் தெரியாமல் 
துடித்தேன் - என்
இதய சுவற்றில் 
உளியால் உன்னை 
செதுக்கி சிலை வடித்தேன்
என் ரத்தம் சாகவில்லை
உன்னால்...

த. நாகலிங்கம்   

No comments:

Post a Comment