வெற்று காகிதம்
வேதனையில் உழல்கிறேன்
சுற்றமும் நட்பும் சூழவரும்
நாளினை பார்க்கிறேன்
கற்ற மனம் தான்
குற்றமனம் ஆகுமோ?
தேடிய நாட்களில்
கூடிய மனம் இன்று
ஓடிய காரணம்?
விளையாட்டு பார்வைகள்
விதியோடு வினையானது
கலை கட்டும் முகத்தில் இன்று
களை எடுக்க யாருமில்லை
காற்றோடு கலக்க ஆசைப்பட்டேன்
நேற்றோடு மாறிவிட்டேன்
எதற்காக உயிர் ?
புரியாத காலங்களில்
அறியாத பருவங்களில்
தெரியாமல் இருந்தது.
பொட்டில் அரைந்து புத்தி
புகட்டியது இன்று...
வந்ததை செய்.. வாழ்வாய்!
வெந்ததை திடம் ஆக்கும்
தந்ததை புடம் போடும்,
பல தோல்விகள் கண்ட மனம்!
பிரிந்த காலங்களில்
புரிந்த மனம் - இன்று
வருந்தாத காரணம்
வாழ்க்கை பாடம்
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment