இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, October 6, 2011

நான் கவிஞனாய்.....

எரியும் நெருப்பில் சாம்பல் 
அல்ல நான் , தங்கம்!
குளிரும் காற்றின் கொடுமை 
அல்ல நான், இன்பம்
காற்றாடி போல் பறக்க 
மனம் தனியாக திரிகிறது
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

சிந்திக்க நினைத்திருந்து 
மறந்து போனேன் கவிஞன் 
என்பதை ஒரு நொடியில் 
கற்பனை தான் கவிதை
உண்மையும் தான் சில நேரங்களில்

சிறகுகள் ஒடிந்த பறவை 
தானே சிறகுகள் பொருத்தி 
கொண்டது, நானும் தான்
சிரமங்களை மதித்ததால் 

படைப்பவன் இறைவன் மட்டுமல்ல
நானும் தான், கவிக்குழந்தை 
தவழும் மடியை படைப்பவன்
எதைக்கண்டாலும் கவி வடிக்கும்
சிற்பக் கலைஞன் கவிஞன் 
பொங்கி எழுவதிலும் 
உணர்வை வெளிப்படுத்துவதிலும்
கவிஞன் நிலைப்பான்
நான் எரியும் நெருப்பில்
தங்கம், குளிரும் காற்றின்
இன்பம், கவிஞனாய்...
    
  த.நாகலிங்கம்
          



No comments:

Post a Comment