இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, October 6, 2011

கனவுகள் தான்...

எழுத முடியாத நிமிடங்கள்
பேசக்  கூடிய வார்த்தைகள்
பேனா முள் குத்தி
கிழிந்த காகிதங்கள் 
அவளுக்கென நான்
அலங்கோல ஒப்பனையில்
காலங்கள் வரும் வரை
கல்லூரியின் வாசலில்
கடுந்தவம் பூண்ட 
காட்சிகள், கண்முன்
கரைந்தோட, கருவிழி
தவிர்த்து சிவந்திட்ட
பாகங்கள், விளக்கங்கள்
தேவையில்லை என்ற 
விருப்பங்களின் விளையாட்டுகள்
விசைப்படகை விண்ணில் 
செலுத்திவிட்ட நேரங்கள்
வெறும் பார்வையிலே 
வெற்றி கண்ட வருடங்கள்
எரித்துவிட நினைத்தும்
எரியாத சாம்பலின் 
சாகசங்கள், எறும்பை 
பார்த்து கேலி செய்த 
சுறுசுறுப்பு நாட்கள்  
எளிமையான இரவுகள்
பிரமாண்டமாய் 
புலப்பட்ட விந்தைகள்
இவை அனைத்தும் 
இளமையால் செதுக்கி 
விடப்பட்ட கனவுகள் தான்...

 த.நாகலிங்கம்               

No comments:

Post a Comment