இதயம் தொலைந்த இடம் வேறு
அதை தேடும் இடம் வேறு
உன்னை நினைத்து நான் உறங்காமல்
இருப்பேன் என்று கனவு காணாதே
நான் உன்னோடு தான் உறங்க
விரும்புகிறேன்
உன் மடி என் தலையணை
இரவு முழுதும் உறங்காமல்
நம் காதலை ரசிப்போம்
பிறை நிலவின் வெளிச்சத்தில்
மூடும் இமைகளை வெறுக்கிறேன்
அந்த நொடியில் உன்னை
என் விழிகள் மறந்து விடுமோ
என்பதற்காக அல்ல
என் விழிகள் உன்னை காணாமல்
இறந்து விடுமோ என்பதற்காக...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment