திரும்பி பார்கின்றேன்
திசை தெரியவில்லை
குருடனா? யோசித்தேன்
விடைத் தெரியவில்லை
பார்க்கும் இடமெல்லாம்
மனிதம் தேடுகின்றேன்
புதைக்கும் நாள் அன்றி
எதுவும் படவில்லை
வெறுமை உலகெங்கும்
பொறுமை காத்திருப்பின்
வறுமை வாய் பிளக்கும்
விழித்தே உழுதிடுவோம்
வீரப்பயிர் விதைத்திடுவோம்
கருப்பு பணமனைத்தும்
நெருப்புக்கு இரை ஆக்கிடுவோம்
நாமே உலகமென்னும்
சமத்துவம் காத்திடுவோம்
தீமையை தீயாலே
கொளுத்திடுவோம்
வீழ்க குரோதம்!
வாழ்க பாரதம்!!
No comments:
Post a Comment