எப்படி தான் ஒப்பனை
இல்லாமல் நடிக்க முடிகிறதோ!
உலகம் நாடக மேடை
உண்மைதான் ....
எத்தனை எத்தனை வேஷங்கள்
ஒரே முகத்தில்...
நடிப்பை கற்று கொடுக்கும்
இயக்குனருக்கே(கடவுள்)
தெரியாத பொய் நடிப்பு
ஆயிரங்கள்......
யாரால் தடுக்க முடியும்
ஆண்டவனையே மாற்றிவிடும்
வல்லமை படைத்த
ஒப்பனையற்ற நடிகர்களை?
No comments:
Post a Comment