இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 7, 2011

யாருடைய நாயகம் ?

என் கருவிழி எழுதும்
கடைசி கடிதம் இந்த
இருவிழி அழுதால்
கரைப் புரண்டோடும்
பார்த்த அநியாயம்
எந்த ஊர் போகும்
சொந்தமாகது....
எந்தன் உரிமைகள்
கடமைகள் இடிந்தே போய்விடும்
மடிந்தே மட்கிவிடும்
கண்ணீரை பார்த்ததுண்டா
வெந்நீராய்......?
இந்த பூமியில் எரியும்
அநீதி நெருப்பால்
கண்கள் சூடாகும்
கண்ணீரும் கொதித்து வரும்

இமைகள் அழிந்தே
கண்கள் துடிக்கும்
சுமைகள் தாங்கா
கருவிழி மடியும்
இந்த அநியாயம் 
எந்த ஊர் போகும் 

என் லட்சியம் 
அது நிச்சயம் எளிமையாகாது
என்றும்  இனிமை காணாது
நம் புனிதம் போற்றாது 

வளர்த்து விட்ட மக்கள் தாயும் 
அழிக்க துடிக்காது 
இனி எதிர்த்து  நிற்காது
உரிமைகள் கடமைகள் 
அழிந்து போய்விடும் 
மடிந்து மட்கிவிடும்
இடிந்து தூளாகும் 
கேள்விகள் கேட்காது 
கடவுளே பார்க்காது 
நம்  இம்சைகள் இந்த 
பிறவியில் தீர்ந்திடுமா?
வளர்ந்தே பெருகிடுமா?
சுரண்டல் இந்த பூமியை குறைக்கும் 
வறண்டு வறண்டு தொண்டைகள்
துடிக்கும், எதிர்க்க முடியாது
கேட்க ஆளேது ?

இந்த ஊழல் வளரும் பெரும் புயல் 
விழுங்கி ஏப்பம் விடும்
குழிகள் தோண்டி புதைத்து விடும்...
இது ஜனநாயகம் என்றால்
யாருடைய நாயகம்?

த.நாகலிங்கம்  
 
 
    
     

 

No comments:

Post a Comment