நீ இருக்கும் நேரம் எந்தன்
நெஞ்சில் மணம் பிறக்கும்
உன்னோடு வாழும் காலம்
உயிர்கள் எல்லாம் உறைந்துவிடும்
நினைத்ததை மாற்றி பார்க்க
நேரங்கள் ஒன்றும் போதவில்லை
நெஞ்சினில் உந்தன் சுமை
யாருக்கும் தர மனமில்லை
கைது செய்தாலும் உந்தன் கண்ணிலே
வாழ்ந்திடுவேன்....
உன்னோடு என்னை சேர்த்த
ஒவ்வொரு அணுவும் நன்றி சொல்லும்
உயிருக்குள் உன்னை
நானும் உடமையாக்கி
உருப்பெருவேனே
நான் உந்தன் வயதை
வாங்கி எந்தன் வயதை
சேர்த்திடுவேன்....
எமன் வந்து என்னை
கேட்டால் எதிரே நின்று
எதிர்த்திடுவேன்...
நீ இருக்கும் நேரம்
வருடங்கள் நிமிடங்களாய்...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment