எனக்கே தெரியாமல் ஆரம்பமானது
முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தது
யார்மேல் விழுவது என்று தெரியாத
விழுந்த அவளின் பார்வை
என்னுள் ஆயிரம் சூரியன்களின்
பிரகாசத்தை விதைத்துச் சென்றது
எங்கே செல்கிறாள் என்று
தெரியாமல் பின் தொடர்தேன்
நான் மட்டுமல்ல, என் உயிரும் தான்
சருகு போல் தென்றலில்
பறந்து பின் தொடர்ந்தேன்
காற்றில் பரவிய அவளது வாசனை
என்னுள் தேவலோக மாற்றத்தை
பரப்பி சென்றது
நீரில் பறந்தேன் காற்றில் நீந்தினேன்
உலகையே வசம் என்றிருந்தேன்
இருன்ன்னந்தாலும் தொடர்வதை
நிறுத்தவில்லை .......
தொடர்ந்தேன் தொடர்ந்தேன்
எல்லை உண்டு என்பதை
உணர்ந்தேன்....
அவள் மணவறையில்
நான் அவள் எதிரில்
எங்கிருந்தாலும் வாழ்க
என்னும் ஆசிர்வாதத்துடன்
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment