நீ ஒரு நடிகன்
குழந்தையாக நடித்தாய்
குதுகலம் கிடைத்தது
மகனாக நடித்தாய்
மகிழ்ச்சி கிடைத்தது
மாணவாக நடித்தாய்
மதிப்பு கிடைத்தது
பட்டதாரியாக நடித்தாய்
பதவி கிடைத்தது
கணவனாக நடித்தாய்
கனிவு கிடைத்தது
தந்தையாக நடித்தாய்
தன்னம்பிக்கை கிடைத்தது
தாத்தாவாக நடித்தாய்
தத்துவம் கிடைத்தது
நீ எப்போது மனிதனாக
நடிப்பாய்?
மகத்துவம் கிடைக்க?
த.நாகலிங்கம்
No comments:
Post a Comment